DINAVELMEDIA7 # போலிச்சான்று சமர்ப்பித்த ஆறு சுகாதார ஆய்வாளர்கள் பணிநீக்கம்.




போலிச்சான்று சமர்ப்பித்த ஆறு சுகாதார ஆய்வாளர்கள் பணிநீக்கம்:திருப்பூரில் கொரோனா பரவலால் அவசர காலத் தேவையை கருத்தில் கொண்டு காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் கிரேடு-2 பணியிடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டன. ஒப்பந்த அடிப்படையில்மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில்இவர்களுக்கான பணி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது . திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம்,பொன்னாபுரம், மூலனூர் ,கணியூர் ஆகிய வட்டாரங்களில் கமலக்கண்ணன் சத்தியமூர்த்தி ,அன்பு ,முருகன், சுதாகர் .தினேஷ்குமார், சாமி ராஜா ஆகியோர் கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்தனர்.சுகாதார ஆய்வாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் 6 பேரும் சமர்ப்பித்துள்ள பயிற்சி சான்றிதழ் உண்மை தன்மை இல்லை என ஆய்வில் தெரியவந்தது. இதனால் மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ் குமார்ஆறு பேரையும் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

 திருப்பூர் செய்தியாளர்கள்.

 M.துரை,T. யோகராஜ்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா

# DINAVEL NEWS # வேலூரில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையைச் சார்ந்த வேலூர் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் நந்தகுமார் இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.