DINAVELMEDIA7 # நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று (27.08.2020) கோவிட்-19 கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழை தேசிய தகவலியல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இணைய வலைதளம் மூலம் வழங்குவதற்கான சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.





நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் விருந்தினர் மாளிகையில் இன்று (27.08.2020) கோவிட்-19 கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழை தேசிய தகவலியல் மையம் சார்பில் உருவாக்கப்பட்ட இணைய வலைதளம் மூலம் வழங்குவதற்கான சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், முதன்மை செயலாளர்/தலைமை செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி.சுப்ரியா சாஹ¨ இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

       மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய தினம் வரை 1472 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1121 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 341 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 கொரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு பரிசோதனை முடிவு சான்றிதழ் ஆன்லைன் வலைதளம் வாயிலாக பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்திகளாக 19.08.2020 முதல் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வரை நமது மாவட்டத்தில் 6000-த்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தவுடனே www.nilgiris.nic.in என்ற வலைதள முகவரிக்கு சென்று அதற்குரிய இணைப்பை பயன்படுத்தி பிரதி எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதன் மூலம் கொரோனா பரிசோதனை வழங்கியவர்களின் முடிவுகள் வந்தவுடன் அவர்களது அலைபேசிக்கு குறுந்தகவல்களாக உடனுக்குடன் அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தியில் பரிசோதனை முடிவுகளை பிரதி எடுப்பதற்கும் இணைப்பு அனுப்பி வைக்கப்படும். அந்த பிரதியில் உண்மை தன்மையை உறுதி செய்வதற்கு QR CODE இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனை செய்தவர்கள் தங்களது பெயர் மற்றும் SRF NUMBER-ஐ பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம் என முதன்மை செயலாளர்/தலைமை செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி.சுப்ரியா சாஹ¨ இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
  மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருந்து தேவையற்ற பயணங்களை தவிர்த்து முறையாக முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கிருமி நாசினி கொண்டு வீடுகளை சுத்தம் செய்து கொரோனா பரவுதலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு முதன்மை செயலாளர்/தலைமை செயல் அலுவலர் இன்கோசர்வ் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திருமதி.சுப்ரியா சாஹ¨ இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.
 இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட நிருபர் கிருஸ்டி.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா