DINAVELMEDIA7 # தேனி மாவட்டத்தில் கோவிட் கேர் சென்டர்களில் பணி செய்தவர்களுக்கு மொத்தம் ரூ.2.30 லட்சம் சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
29/08/20:தேனி :தேனி மாவட்டத்தில் கோவிட் கேர் சென்டர்களில் பணி செய்தவர்களுக்கு மொத்தம் ரூ.2.30 லட்சம் சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் கொரோனா கேர் சென்டர்கள் 9 செயல்படுகிறது. இதில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் தினக்கூலியாக ரூ.1500 வீதமும், பணி முடிந்து அவர்கள் தனிமையில் இருக்கும் போது ரூ.750 வீதம் வழங்குவதாக நியமிக்கப்பட்டனர். இதற்கு தேனி கோபிநாதன் ஆட்களை வழங்கினார். சிகிச்சை மையங்களில் நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கல்லுாரியில் 8 பேருக்கும், குள்ளப்புரம் வேளாண் கல்லுாரியில்8 பேருக்கும் 27 நாட்கள் சம்பளம் ரூ.2.30 லட்சம் வழங்கக்கோரி அப்பணியாளர்கள், கோபிநாதன் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு உயிரை பணயம் வைத்து உணவு, மருந்து வழங்கல், சமையல், துாய்மை பணி செய்தோம். தற்போது நீக்கி விட்டனர். பணியாற்றிய நாட்களுக்கு ரூ.2.30 லட்சம் சம்பளம் தரவில்லை. பெரியகுளம் ஒன்றிய அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர்.
Comments
Post a Comment