DINAVELMEDIA7 # புகையிலை பொருட்கள் விற்ற 17 பேரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்.




புகையிலை பொருட்கள் விற்ற 17 பேரை கைது  செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது  புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோ.பாலாஜிசரவணன் அவர்கள் தலைமையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் . இந்த நிலையில்  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்டிகடை உள்ளிட்டவைகளை போலீசார்  அதிரடி சோதனை நடத்தி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகளில் இருந்து 100 - க்கும் மேற்பட்ட புகை யிலை பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.


தின வேல் செய்திகளுக்காக
புதுக்கோட்டை நிருபர்
சுகுமார்.

Comments