DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் அரியலூரை பாதுகாப்பான மாவட்டமாக மாற்றலாம்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தில் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் பொருத்தப்பட்ட 9 கண்காணிப்பு கேமராக்களை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் இன்று இயக்கி வைத்தார்கள்.
இந்த கேமராக்கள் கிராமத்தின் முக்கிய தெருக்கள், ஊராட்சி மன்றத் தொடக்க பள்ளி, மெயின் ரோடு, ரயில்வே கேட், மாரியம்மன் கோவில் மற்றும் அம்பேத்கர் சிலை போன்ற முக்கியமான பகுதிகளை 24×7 கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசியதாவது: கிராமங்களில் திருட்டு அல்லது குற்ற செயல்புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு வருபவர்களின் நடமாட்டத்தை எளிதாக கண்டறிந்து, அவர்களை அடையாளம் காண மற்றும் அவர்களை பிடிப்பதற்கு மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமராக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. கிராமங்களில் முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் குற்றங்கள் குறைந்ததுமேலும் அரியலூரை பாதுகாப்பான மாவட்டமாக மாற்றலாம்.
செய்தியாளர் சவுக்கத்
Comments
Post a Comment