DINAVEL MEDIA 7 # தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், 4வது வார்டு, 7வது வார்டு, கோட்டூர் அத்திவாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமரா துவக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அருண்குமார் வரவேற்புரையாற்றினார்.


தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் கேமரா துவக்கம்

தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், 4வது வார்டு, 7வது வார்டு, கோட்டூர் அத்திவாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கேமரா துவக்க விழா ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தலைவர் கவிதா டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் அருண்குமார் வரவேற்புரையாற்றினார். 

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தி மூர்த்தி, கீதா விஜி, டி.தரணிதரன், வேளாங்கண்ணி சரவணன், நாகஜோதி வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

புழல் சரக உதவி ஆணையாளர் ராம.ஸ்ரீகாந்த், செங்குன்றம் காவல் நிலையம் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர், புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், துணைப் பெருந்தலைவர் சாந்தி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேமராவை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் ஊக்குநர் என்.வேல்விழி, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெ.முருகன், ஜெ.டேவிட்சன், மூர்த்தி, விஜி, வாசுதேவன், எம்.சரவணன், அப்பு, பாலவாயில் சரவணன், எஸ்.நாகா, ஜி.வினோத், ரூபன், எஸ்.குருசாமி, பி.எழில்மணி, வி.சுரேஷ், எஸ்.வேலாயுதம், ஏ.கௌதமன், நாகராஜ், அஸ்வின் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் பி.யுகேஸ்குமார் நன்றி நவின்றார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.