புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி DINAVELMEDIA7 # அருகே திருநாளூரில் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.



சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தொல்லியல் துறை பேராசிரியர் ஆய்வு
 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூரில் பழமையான சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தொல்லியல் துறை உதவிப் பேராசிரியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டனர்
 திருநாலூர் வடக்கில் உள்ள பெரிய குளத்தின் அருகே உள்ள திடல் போன்ற பகுதியில் கடந்த 2005ஆம் ஆண்டு இரண்டு அடி ஆழத்தில் புதையுண்டு இருந்த ஆவுடை துர்க்கை தட்சிணாமூர்த்தி அம்மன் என ஆறு சிலைகளை அப்பகுதி மக்கள் கண்டெடுத்து வழிபட்டு வருகின்றனர் மேலும் பழைய கட்டுமானத்திற்கான செங்கல்கள் ஆங்காங்கே திட்டுத்திட்டாக மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த ஜீவானந்தம் கூறியபோது இங்கு கிடைத்த பழமையான கற்சிலைகளை மீட்டு இங்கேயே வைத்து வழிபட்டு வருகிறோம் இதை கதிரேசன் கோவில் என்று அழைத்து வருகிறோம் இப்பகுதியில் கிடைத்த பழமையான நாணயத்தை பத்திரப்படுத்தி வைத்துள்ளோம் மேலும் வேலைப்பாடுகளுடன் கூடிய பனை ஓடுகள் பழைய செங்கல் கற்கள் உள்ளன இப்பகுதியே அகழ்வு  செய்ய வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்
 இந்நிலையில் அந்த இடத்தை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறையின் உதவிப்பேராசிரியர் இனியன் ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியபோது
 லிங்கம் இல்லாமல் கிடைத்துள்ள ஆவுடை மற்றும் இதர சிலைகளின் அமைப்பின் மூலம் இந்த சிலைகள் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருத முடிகிறது மேலும் இங்கு கிடைத்துள்ள நாணயம் பானை ஓடுகள் செங்கல்களை கொண்டு அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் பின்னர் இறுதி அறிக்கை தயார் செய்து மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா