DINAVELMEDIA7 # பத்திரிக்கைச் செய்திLKG அல்லது பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (25%) 2020-2021ஆம் ஆண்டு சேர்க்கை .



பத்திரிக்கைச் செய்தி
LKG அல்லது பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் இலவச மற்றும் கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் (25%) 2020-2021ஆம் ஆண்டு சேர்க்கை இணையதள
வழியாக 27.08.2020 முதல் 25.09 2020 வரையில் விண்ணப்பங்கள் காலை 10.00 மணி
முதல் பிற்பகல் 04.30 மணி வரை rte.tnschools.gov.in என்ற இணையதள வழியாக
பதிவு செய்யலாம்.
அனைத்து ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலகங்கள், அனைத்து ஒன்றிய
வட்டார வளமைய அலுவலகங்கள், அனைத்து மாவட்டக்கல்வி அலுவலகம், அரியலூர்,
உடையார்பாளையம், செந்துறை. முதன்மைக்கல்வி அலுவலகம், அரியலூர் மற்றும்
தனியார் இணையதள மையங்களில் இணையதள சேர்க்கைக்கான பதிவு நடைபெறும்.
சேர்க்கை நடைபெறும் வகுப்பு - LKG அல்லது பள்ளிகளில் நுழைவு நிலை
வருப்பபு மட்டும்.
தகுதி வாய்ந்த பள்ளிகள் சிறுபான்மையற்ற மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
மெட்ரிக் பள்ளிகள்
தகுதியான மாணவர்கள் - நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட, ஆதரவற்ற
குழந்தைகள், HIV ஆல் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்
துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகள்,
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் - புகைப்படம் (கடவுச்சீட்டு அளவில்),
மாணவரின் பிறப்புச் சான்று, பெற்றோரின் இருப்பிடச் சான்று, பெற்றோர்களின்
வருமானச் சான்று (உச்ச வரம்பு ரூ.2 இலட்சம்), சாதிச்சான்று, இதர சான்றுகள்
(முன்னுரிமைக்கானது), குழந்தையின் ஆதார் அடையாள அட்டை.
மேலும், விபரங்களுக்கு தொலைபேசி எண். 04329-22099 எண்ணை தொடர்பு
கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள்
தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் 
சவுக்கத்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா