DINAVELMEDIA7 # கம்பத்தில் தாய், தந்தையை அரிவளால் வெட்டிய மகன் பெல்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.



கம்பம்:கம்பத்தில் தாய், தந்தையை அரிவளால் வெட்டிய மகன் பெல்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.
*தேனி மாவட்டம் கம்பம் நாகமணியம்மாள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே உள்ள காலனியை சேர்ந்த ஓய்வு எஸ்.ஐ., முருகேசன் 59, இவரது மனைவி இந்துராணி 55. மகன் மனோஜ்குமார் 26. பி.இ., பட்டதாரி. விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைக்கவில்லை என பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.   நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற மகனை தந்தை தடுத்தார்.
*இதில் ஏற்பட்ட தகராறில் தந்தை,தாய் இருவரையும் மனோஜ்குமார் அரிவாளால் வெட்டினார்.பின் தனது அறைக்குள் சென்று தாழ் போட்டுள்ளார். காயமடைந்த பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். கம்பம் தெற்கு போலீசார் முருகேசன் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்தபோது, மனோஜ்குமார் 'பெல்டால்' தனது கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். இன்ஸ்பெக்டர் கீதா விசாரிக்கிறார்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.