DINAVELMEDIA7 # தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.



தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
*நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 128.75 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 334 கன அடியாகும். தமிழகப்பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர் இருப்பு 4428 மில்லியன் கன அடியாகும். தென்மேற்கு பருவ மழையால் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக ஆக. 13 ல் 137 அடியை எட்டியது. கடந்த 17 நாட்களில் 8 அடிக்கும் மேல் நீர்மட்டம் குறைந்துள்ளது.
*நீர்பிடிப்பில் தொடர்ந்து மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்திறப்பை குறைக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வைகை அணை நீர்மட்டம் 58.92 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்வரத்து 1356 கன அடியாகவும், நீர்திறப்பு 72 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 3406 மில்லியன் கன அடியாகும்.

Comments