DINAVELMEDIA7 # கம்பம்:கேரள கோயில்களில் உள்ள ஆயிரம் கிலோ தங்கத்தை டெபாசிட் ,அடமானம் வைப்பது.
கம்பம்:கேரள கோயில்களில் உள்ள ஆயிரம் கிலோ தங்கத்தை டெபாசிட் ,அடமானம் வைப்பது என தேவசம்போர்டு முடிவுசெய்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை செய்து வருவதாக அறிவித்துள்ளது.
*கேரளாவில் 1248 கோயில்களை தேவசம் போர்டு நிர்வகிக்கிறது. கொரோனாவால் 5 மாதங்களாக கோயில்கள் மூடி வருவாய் பாதிக்கப்பட்டது. சபரிமலை கோயிலில் 100 கோடி வருவாய் சீசனில் கிடைக்கும். கோயில் நிர்வாகம், சம்பளத்திற்கென சபரிமலை கோயிலிற்கு மட்டும் மாதம் ரூ. 50 கோடி தேவைப்படுகிறது. 1200 கோயில்களில் பக்தர்கள் வழங்கிய சுமார் ஆயிரம் கிலோ தங்கத்தை, ரிசர்வ் வங்கியில் அடமானம் அல்லது டெபாசிட் செய்வது என்று தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதில் சுவாமிகளுக்கு சாத்தப்படும் நகைகள் இடம் பெறாது. கோயில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட தங்கநாணயங்கள், தங்க கட்டிகள் மட்டுமே அடங்கும்.
2017ல் திருப்பதி கோயில் நிர்வாகம் ஸ்டேட் வங்கியில் 2780 கிலோ தங்கத்தையும், சாய்பாபா கோயில் நிர்வாகம் 200 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்துள்ளது. எனவே, இது புதிய விஷயம் அல்ல. இதில் கிடைக்கும் நிதியை பயன்படுத்தி, 1200 கோயில்களின் நிர்வாகத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம், என தேவசம் போர்டு தலைவர் என். வாசு கூறினார்.
Comments
Post a Comment