DINAVELMEDIA7 # சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.




சேலம் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 451 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களாக 250-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 297 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 451 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இது தான் மாவட்டத்தில் ஒரே நாளில் அதிக பாதிப்பாகும்.

அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 291 பேர், ஆத்தூரில் 48 பேர், வீரபாண்டியில் 16 பேர், சங்ககிரியில் 14 பேர், சேலம் ஒன்றியத்தில் 12 பேர், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், மகுடஞ்சாவடியில் 7 பேர், எடப்பாடி, வாழவந்தி ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், மேட்டூரில் 5 பேர், ஓமலூரில் 4 பேர், கொங்கணாபுரம், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், அரியபாளையம், மேச்சேரி, வடுகப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 3 பேரும், விழுப்புரத்தில் இருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் மேலும் 2 பயிற்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த 222 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா