DINAVELMEDIA7 # நீலகிரி உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்புப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





நீலகிரி உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்புப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீலகிரி உதகை ஊராட்சிக்குட்பட்ட கூக்கல்தொரை, சீகுலா, உயிலட்டி, குருமுடி, பணஹட்டி ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்புப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் அன்று(26.08.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பகுதிகளில் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் ரேஷன் பொருட்கள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பி அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
       மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வெளியாட்கள் யாரும் உள்ளே வராமல் இருக்க காவல்துறையின் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளளவர்களுக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் போன்றவற்றை தவறாமல் வழங்க சுகாதார துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பதோடு, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
        இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கெட்சி லீமா அமாலினி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.முருகேசன், குருமுடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.ஜேசுதா, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.மாயன் (எ) மாதன், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ஶ்ரீதர், திரு.ஜெய்சங்கர், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.