Posts

Showing posts from September, 2020

தினவேல் செய்திகள் # போடி 24 வார்டு பகுதியில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி P.H.ரோடு காளியம்மன் கோயில் எதிரில் குழியை மூட நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை

Image
29/09/20: போடிநாயக்கனூர்: போடி 24 வார்டு பகுதியில் உள்ள குப்பிநாயக்கன்பட்டி P.H.ரோடு காளியம்மன் கோயில் எதிரில் உள்ள வீடுகள் முன்பாக பல நாட்களுக்கு முன் தண்ணீர் மீட்டர் பொருத்துவதற்காக குழி தோண்டப்பட்டன அப்போது ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த அனைத்து வீடுகளுக்கு செல்லும் பழைய தண்ணிர் இணைப்பே துண்டித்து விட்டனர், இதனால் அதில் புழு வைத்து உள்ளது மற்றும் இப்பொகுது அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது, மேலும் வயதானவர்கள் குழந்தைகள் குழியை தாண்டி செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர் இதை சரி செய்ய முனிசிபல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது என பொதுமக்கள் வேதனை. தினவேல் நாளிதழ் போடி நிருபர்: க.சிவக்குமார்.

DINAVELMEDIA7 # கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்கையில் அமைந்துள்ள சூராணிக்கரை அருள்மிகு ஸ்ரீ நாக கன்னி அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா கொரோனா தடுப்பு உத்தரவு காரணமாக குறைந்த பக்தர்களுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.

Image
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்கையில் அமைந்துள்ள சூராணிக்கரை அருள்மிகு ஸ்ரீ நாக கன்னி அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா கொரோனா தடுப்பு உத்தரவு காரணமாக குறைந்த பக்தர்களுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியை சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் அனைத்து பக்தர்களும் காண நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்ட எல்கையில் பழவூர் அருகே அமைந்துள்ள சூராணிக்கரை அருள்மிகு ஸ்ரீ நாக கன்னி ஆலயத்திற்கு உள்ளூர் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களிருந்து பக்தர்கள் வந்து வெள்ளி, செவ்வாய், சித்ரா பௌர்ணமி, அம்மாவாசை போன்ற நாட்களில் தரிசனம் செய்து அருள் வாக்கு கேட்பது வழக்கம். அனைத்து பக்தர்களின் வேண்டுதல்களை இந்த அம்மன் நிறைவேற்றி வருவதால் கடந்த சில வருடங்களாக பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழாவிற்கு கொரோனா தடுப்பு உத்தரவு அமலில் உள்ள காரணமாக கோவில் பொது இடங்களில் அதிக பக்தர்கள் கூடுவதை தடுக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் குறைந

DINAVELMEDIA7 # குமரி மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி : நரிக்குளத்தில் பேரிடர் கால ஒத்திகை நடைபெற்றது...

Image
குமரி மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி : நரிக்குளத்தில் பேரிடர் கால ஒத்திகை நடைபெற்றது... கன்னியாகுமரி மாவட்டம் தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகையானது இன்று கன்னியாகுமரி அடுத்துள்ள நரிக்குளத்தில் நடைபெற்றது.  தீயணைப்பு துறையினர் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது ,உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீயில் சிக்கி இருக்கும் மக்களை காப்பது,பருவகாலங்களில் மழை வெள்ளங்களால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கலாம் ஆகவே அங்கு இருக்கும் வீடுகள் மழை வெள்ளம் நிறைந்து மக்கள் வெளிவரமுடியாமல் தவிப்பவர்களை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் பயிற்சி எடுப்பது வழக்கம். இந்த இக்கட்டான சூழலிலும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்கள் சேவை செய்து வருகின்றனர்.இதற்கு தமிழக அரசு தீயணைப்பு துறையிருக்கு துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என வழங்கி உள்ளது . பேரிடர் கால மீட்பு பணிகளை கணக்கில் கொண்டு தீயணைப்படை வீரர்கள் தங்களை தானே அடிக்கடி சோதனை செய்து பார்த்து கொண்டு எப்போதும் தயார் நிலையில் இர

DINAVELMEDIA7 # நகராட்சி ஊழியர்கள் முககவசம் இன்றி செயல்படுகிறார்

Image
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி முககவசம் இன்றி வருபவர்களை அபராதம் விதிக்கப்படுகிறது பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய நகராட்சி ஊழியர்கள் முககவசம் இன்றி செயல்படுகிறார் இதனால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேசப்படுகிறது

DINAVELMEDIA7 # விருதுநகரில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன.

Image
விருதுநகரில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டன. இதில் நகர செயலாளர் கமல் கண்ணன், ஒன்றிய செயலாளர் வெல்டிங் விஜி, மத்திய மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் நெல்சன்,மாவட்ட ஆதிதிராவிட அணி நிர்வாகி நிக்கோலஸ், மத்திய மாவட்ட தொழிலாளர் அணி நிர்வாகி நாகராஜன், மாவட்ட மாணவரணி கவி அரசு, மகளிரணி பிரபாவதி, ஒன்றிய இணை செயலாளர் மாயன், இளைஞரணி பாண்டி, தொழிலாளர் அணி நிர்வாகி பாண்டி,நிர்வாகிகள் முத்து கமல், பாலமுருகன், பன்னீர்' தங்கவேல், வெல்டிங் கணேசன், சரவணன். பால்ராஜ்,கணேசன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாஸ்மாக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Image
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாஸ்மாக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு  அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லா வாரியில் அரசு மதுபான கடை டாஸ்மாக் நேற்று திறக்கப்பட்டது இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்த தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு திரு ஜெயசீலன் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது வல்லவாரி கிராமத்தில் சமாதான கூட்டம் நடத்தி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்றும் அதுவரை டாஸ்மாக் கடையை மூடுவது என்றும் எடுத்து கூறினர் இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனிடையே மேலும் இரண்டு கடைகள் அறந்தாங்கி அடுத்து நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை நேற்று திறக்க இருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திறக்கப்படவில்லை இதேபோன்று அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி சாலையில் டாஸ்மாக் திறக்க பொதும

DINAVELMEDIA7 # தேனி கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளைமீறி இயக்கப்பட்ட ஆட்டோ,டூவீலர், போன்ற இதர வாகனங்கள் போலீசாரல் கைப்பற்றப்பட்டன.

Image
24/09/20:தேனி மாவட்டம் : தேனி கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளைமீறி இயக்கப்பட்ட ஆட்டோ,டூவீலர், போன்ற இதர வாகனங்கள் போலீசாரல் கைப்பற்றப்பட்டன. போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்கள் மொத்தம் : 2555 இவை அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டன. தற்போது ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை அந்தந்த வாகனத்தின் உரிமையாளரிடம் விரைவில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி உத்திரவு பிறப்பித்துள்ளார் விபத்து, மற்றும்குற்ற வழக்குகளில் தீர்வு பெற்ற தீர்ப்பு நகல்களை உரிமையாளர்கள் காண்பித்து பெற்றுச் செல்லலாம். ஊரடங்கில் விதிமீறியவர்களிடம் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வாகனத்தின் உரிமையாளர்கள் ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு ஆவணங்களை உடன் போலீசாரிடம் சமர்பித்து வாகனங்களை பெற்று செல்லலாம் என்றும் இதுவரை 822 வாகனங்கள், வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என்று கூறினார். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்.

DINAVELMEDIA7 # தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அனை அடிவாரத்தில் பழியர் இனமக்கள் குடிஇருந்து வருகிறார்கள் அந்த பகுதி மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று அவர்களுடைய குறைகளை கேட்டாரிந்தார்

Image
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கருப்பாநதி அனை அடிவாரத்தில் பழியர் இனமக்கள் குடிஇருந்து வருகிறார்கள் அந்த பகுதி மக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாக சென்று அவர்களுடைய குறைகளை கேட்டாரிந்தார் மாவட்ட ஆட்சியருடன் கோட்டாச்சி தலைவர் பழனிகுமார்  கடையநல்லூர் தாசில்தார் பாலசுப்பிரமணி   வருவாய் ஆய்வாளர்முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

DINAVELMEDIA7 # தமிழ்நாடு அரசின் கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.முத்தையா அவர்களை, செங்கோட்டை வட்டம் கிராம உதவியாளர் சங்கம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Image
தமிழ்நாடு அரசின் கிராம உதவியாளர் சங்க மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.முத்தையா அவர்களை, செங்கோட்டை வட்டம் கிராம உதவியாளர் சங்கம் சார்பாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் செங்கோட்டை வட்டம் கிராம உதவியாளர் சங்கம் தலைவர், முருகையா, துனைத்தலைவர், மணிகண்டன். பொருளாளர் முருகையா, கோட்டத்தலைவர், இலஞ்சி, அருணாசலம் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

DINAVELMEDIA7 # வேளாண்மசோதாவை எதிர்த்து SDPIகட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எரிந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.

Image
வேளாண்மசோதாவை எதிர்த்து SDPIகட்சி சார்பில் சட்ட நகலை கிழித்து எரிந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. போராட்டத்தின் போது தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றபோது தடுக்கமுயன்ற போலீசாருக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

DINAVELMEDIA7 # செங்கம் அடுத்த புழுதியூர் பகுதியை சேர்த்த நடராஜ் (வயது 51) s/o ரங்கநாதன் கோனார்என்ற நபரை மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்

Image
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புழுதியூர் பகுதியை சேர்த்த நடராஜ் (வயது 51) s/o ரங்கநாதன் கோனார்என்ற நபரை மர்ம நபர்கள் சராமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர் சம்பவ இடத்திற்க்கு விரைந்துவந்த செங்கம் காவல் துனை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகிறார்

DINAVELMEDIA7 # தேனியில் மணிப்படி, பெரியாறு அணைப்பகுதி,தேக்கடி, உத்தமபாளையம், ஆகிய பகுதிகளில் பத்து நாட்களாக பரவலான நல்ல மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது

Image
24/09/20:தேனி மாவட்டம்: தேனியில் மணிப்படி, பெரியாறு அணைப்பகுதி,தேக்கடி, உத்தமபாளையம், ஆகிய பகுதிகளில் பத்து நாட்களாக பரவலான நல்ல மழை பெய்துவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. நேற்று மழையளவு : மணிப்படி 1.5.மி.மீ. கூடலுார் 10.4,மி.மீ பாதிபெரியாறு 69.8,மி.மீ தேக்கடி 37.8,மி.மீ உத்தமபாளையம் 2.4.மி.மீ மழை அளவு பதிவாகி இருந்தது. போடியில் மூன்று நாட்களுக்கு முன்பு சாரல் மழை துளிகள் விழுந்தது, பெரும் மழை பொழிவு இல்லை. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,

DINAVELMEDIA7 # போலியாக சையது பீடி பெயரில் பீடி தயாரித்து விற்பனை செய்பவர்.

Image
24/09/20:தேனி மாவட்டம் : அற்புதானந்தம் 54.தேனியை சேர்ந்த இவர் சையது பீடி கிளை நிறுவன மேலாளர். இவர் கோட்டூர் வீரப்பன் கோயில் தெருவிற்கு சையது பீடி விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். சாதிக் பாட்ஷா 54 சின்னமனுார் சாமிகுளம் சேர்ந்த இவர் போலியாக சையது பீடி பெயரில் பீடி தயாரித்து விற்பனை செய்பவர். இந்நிறுவன போலி பீடி நிறுவன பண்டல் மற்றும் பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத் கில் விற்பனைக்கு வைத்திருந்த பார்த்த அற்புதானந்தம், உடனடியாக தம் கம்பெனி பெயரில் போலியாக பீடி விற்பனை நடைபெறுவதாக வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். சாதிக்பாட்ஷாவை கைது செய்த போலீசார்அவரிடம் இருந்த போலி பண்டல் கைபற்றி விசாரித்து வருகின்றனர்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்.

DINAVELMEDIA7 # அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் ஊராட்சியில் அங்கன்வாடி யில் ஊட்டச்சத்து மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது

Image
அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் ஊராட்சியில் அங்கன்வாடி யில் ஊட்டச்சத்து மாதம் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் அங்கன்வாடி பனியாளர் குழைந்தைகள் பென்களுக்கு உயரம் எடை பரிசோதிக்கபட்டு ஊட்டச்சத்து உணவுப்பொருட்களைஅதிகலவில் உட்கொள்ள அரிவுரைகள் வழங்கினார்கள் இதில் ஊராட்சிமனறதலைவர் தனலெட்சுமி மருதமுத்து அங்கன்வாடி பனியாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர் நிருபர் சவுக்கத்

DINAVELMEDIA7 # ஆண்டிபட்டி வைகை அணையில 16 லட்சம் மீன் குஞ்சுகள் விட மீன்வளத்துறை நிர்ணயம் செய்து உள்ளது.

Image
23/09/20:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வைகை அணையில 16 லட்சம் மீன் குஞ்சுகள் விட மீன்வளத்துறை நிர்ணயம் செய்து உள்ளது.இங்கு இதுவரை 12.5 லட்ச மீன்கள் விடப்பட்டு உள்ளன. தற்போது வைகை அணை நீர் தேக்கத்திலகட்ளா, மிருகாள், ரோகு போன்ற 50,000 வகை மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு மீன்வளத்துறை மூலம் வைகை நீரில் விடப்பட்டன. வைகை நீர்த்தேக்கத்தில் வளரும் மீன்களை நம்பி மீன் வியாபாரம் செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பெரியகுளம் சப் - கலெக்டர் சினேகா மதுரை மண்டல மீன்வளத் துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் பஞ்ச ராஜா, மீன்வள ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

DINAVELMEDIA7 # தேனி 18 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் தேனி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.

Image
23/09/20:தேனி மாவட்டம்: தேனி 18 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் தேனி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் 8 இடங்களில் மேல்நிலை தொட்டி, தரைமட்ட தொட்டிகள்,மற்றும் குழாய்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் பணிகள் விரைவுபடுத்தி மார்ச் 2021க்குள் அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.30 ஆயிரம் குடியிருப்புகளில் 10 ஆயிரம் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 20 ஆயிரம் வீடுகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட உள்ளது.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்.

DINAVELMEDIA7 # இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் மாவட்ட நகர ஒன்றியம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

Image
பழனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பாக கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் மாவட்ட நகர ஒன்றியம் சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றினார். மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை ஆலோசித்தனர்

DINAVELMEDIA7 # ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்று புதிய பேருந்து நிலையம் பின்புறம் வாலிபர் படுகொலை.

Image
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இன்று புதிய பேருந்து நிலையம் பின்புறம் வாலிபர் படுகொலை. அரக்கோணம் நகரத்தில் கம்மாறு தெருவை சேர்ந்தவர் கோகுல் வயது 29 இவர் இன்று கண்டறியாத மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்செய்தியை அறிந்த காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்தார்கள் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு... அரக்கோணம் நிபுணர் ஹரிஷ் குமார்

DINAVELMEDIA7 # நாமக்கல் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள *

Image
நாமக்கல் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள *அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி* புதிய *சுற்று சுவரை* நமது சட்ட மன்ற உறுப்பினர் *திரு KPP பாஸ்கர் MLA* அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . நாமக்கல் மாவட்ட தினவேல் செய்திக்காக K.S.வேல்முருகன்.

DINAVELMEDIA7 # பழனியில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத்துறை உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்கள் முறைப்படுத்த வேண்டும்

Image
பழனியில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத்துறை உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்கள் முறைப்படுத்த வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு முறையான மாத ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வைப்புநிதி உடனடியாக வழங்கிட வேண்டும், பணியில் இருக்கும் போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎச்எப், எம்எல்எப், ஏ ஏ எல் எல்எப், போன்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கையில் தங்கள் கட்சியின் போக்குவரத்து தொழிற்சங்க கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது

DINAVELMEDIA7 # ஸ்ரீ நித்தியானந்த சுவாமி என்ற மலையரசன் திருக்கோயிலுக்கு வயதானோர் மற்றும் மாற்று திறனாளிகள் பசியை போக்க ராஜ்குமார் என்பவர் ரூபாய் 15000 கோவில் நிர்வாகத்திடம் வழங்கி இன்று மதிய உணவு வழங்கினார்.

Image
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ நித்தியானந்த சுவாமி என்ற மலையரசன் திருக்கோயிலுக்கு வயதானோர் மற்றும் மாற்று திறனாளிகள் பசியை போக்க ராஜ்குமார் என்பவர் ரூபாய் 15000 கோவில் நிர்வாகத்திடம் வழங்கி இன்று மதிய உணவு வழங்கினார்.

DINAVELMEDIA7 # தென்காசி டவுண் கிளையில், வங்கியில் கடந்த மூன்று நாட்களாக சர்வர் சரியாக வேலை செய்யாததால்..

Image
தென்காசி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. தென்காசி டவுண் கிளையில், வங்கியில் கடந்த மூன்று நாட்களாக சர்வர் சரியாக வேலை செய்யாததால்.. வங்கி சேவை பாதிப்பு. வங்கி வாடிக்கையாளர்கள் அவதி, வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு சரியான பதில் கூற மறுப்பு..

DINAVELMEDIA7 # தென்காசி மாவட்டம். கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தின் அவலமான சாலை.

Image
தென்காசி மாவட்டம். கடையம் அருகே உள்ள கோவிந்தபேரி கிராமத்தின் அவலமான சாலை. சுமார் இரண்டாயிரம் மக்கள் வசிக்கும் கிராமத்தின் சாலை கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது. அரசின் பலதரப்பிற்கும் கோரிக்கை வைத்தும் செவிமடுக்க மறுக்கும் அரசு நிர்வாகம்.

DINAVELMEDIA7 # மதுரை-போடி அகல ரயில்பாதை பணி ரூ.450 கோடியில் நடந்து வருகிறது . இதில் தேனி வரை தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Image
22/09/20:போடி:மதுரை-போடி அகல ரயில்பாதை பணி ரூ.450 கோடியில் நடந்து வருகிறது . இதில் தேனி வரை தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.தேனி ஸ்டேஷன் அமைக்கும் பணிக்கு இடையூறாக1982ல் வருஷநாடு மண் வள பாதுகாப்பு துறை மூலம் நடப்பட்ட பழமையான 50 மரங்கள் உள்ளன. அவற்றை வெட்டிய பின்தான் கட்டுமான பணி நடைபெறும்.ஸ்டேஷன் அமைக்கும் இடத்தின் அருகியுள்ள பழமையான  மரங்களை வெட்ட ரயில்வே துறை வனத்துறையிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இதனால் வனத்துறையிடம் என்.ஓ.சி.வங்குவதிலும்,ரயில்வே பணிகள் தொடர்வதிலும் தாமத நிலை உருவாகியுள்ளது. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,

DINAVELMEDIA7 # கனமழை பெய்துவருகிறது. இதனால் தோட்டத்தில் விதைக்கப்பட்ட ஏலச்செடிகள் சேதம் அடைந்து உள்ளன.

Image
22/09/20:போடி நாயக்கனூர்:-இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. இதனால் தோட்டத்தில் விதைக்கப்பட்ட ஏலச்செடிகள் சேதம் அடைந்து உள்ளன.ஐந்து நாட்களாக இடுக்கி மாவட்டம் சுற்றியுள்ள பூப்பாறை, புளியமலை, நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை உள்ளிட்ட பகுதியில் காற்றுடன கூடிய கனமழை பெய்து வருதால் தோட்டத்தில் உள்ள மரங்கள் விழுவதோடு, ஏலச்செடிகள் சேதம் அடைகின்றன. தற்போது தோட்டத்தில் விளைந்து இருக்கும் ஏலப்பழங்களை பறிக்க வேலையாட்கள் செல்ல முடியாமல் உள்ளனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் : க.சிவக்குமார்.

DINAVELMEDIA7 # மாவட்ட ஆட்சித் தலைவர் குடிமாமராமத்து பணிகளைநேரில் சென்று ஆய்வு நடத்தினார்

Image
மாவட்ட ஆட்சித் தலைவர் குடிமாமராமத்து பணிகளைநேரில் சென்று ஆய்வு நடத்தினார் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம், தோக்கவாடி, செங்கம் போன்ற பகுதிகளில் ஏரிகள் குடிமாமராத்து பணி மூலம் சுமார் 97 லட்ச ரூபாய் மதிப்பில் தூர்வாரப்பட்டதா என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவர் கே எஸ் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தினார் மற்றும் செங்கம் அடுத்த திருவள்ளுவர் நகர் நரிக்குறவ மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் கட்டி உள்ளதா அல்லது பாதியில் நின்று விட்டதா என ஆய்வுகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடியாக வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டார் இவை தவிர்த்து மாற்று திறனாளிகள் விதவைகள் போன்றவர்கள் போன்றவர்களும் மனுவை அளித்தார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். செய்திகள் திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் எஸ். ராமராஜ்

DINAVELMEDIA7 # பழனியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு உட்பட்ட மாணிபகாடு பிரச்சனையில் திண்டுக்கல் ஏடிஎஸ்பி திவ்யன் நேரில் வந்து ஜமாத் உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

Image
*பழனியில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு உட்பட்ட மாணிபகாடு பிரச்சனையில் திண்டுக்கல் ஏடிஎஸ்பி திவ்யன் நேரில் வந்து ஜமாத் உறுப்பினர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் சமரசமாக முடிவடைந்த நிலையில் காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்

DINAVELMEDIA7 # பழனி தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது.

Image
பழனி தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள பாங்க் ஆப் இந்தியா வில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய்எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு குடிநீர் மற்றும் ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர் மகேந்திரன் வங்கி மேலாளர் சோமசேகர் வணக்கம் இந்தியா ராஜா மற்றும் பலர் தனிநபர் இடைவெளி முககவசம் அணிந்து பின்பற்றினர்.

DINAVELMEDIA7 # விவசாயிகளுக்கு_எதிரான_மத்திய_அரசின்_மரணசாசன_வேளாண்_மசோதாவை_ரத்து_செய்ய_வலியுருத்தி#நாமக்கல்_மத்திய_மாவட்டம்_தமிழ்ப்புலிகள்_கட்சியின்_கண்டன#ஆர்பாட்டம்.

Image
#விவசாயிகளுக்கு_எதிரான_மத்திய_அரசின்_மரணசாசன_வேளாண்_மசோதாவை_ரத்து_செய்ய_வலியுருத்தி #நாமக்கல்_மத்திய_மாவட்டம்_தமிழ்ப்புலிகள்_கட்சியின்_கண்டன #ஆர்பாட்டம்... நாமக்கல் மத்திய மாவட்டத்தின் சார்பாக 16 தோழர்கள் கலந்து கொண்டனர் இந்தியாவின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது விவசாயத்தை மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு கார்ப்ரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் விதமாக மூன்று சட்ட மசோதாக்களை சட்டத்திற்கு புறம்பாக சனநாயக சக்திகளின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி மாநிலங்கவையில் நிறைவேற்றியிருக்கிறது... தலைமை மணல்மேடு இரா.கோபி - மத்திய மாவட்ட செயலாளர் வரவேற்புரை இரா.உமாமகேஷ்வரன் - நகர செயலாளர் முன்னிலை வ.கார்த்தி - மேற்கு மாவட்ட செயலாளர் ம.அறிவுத்தமிழன் - கிழக்கு மாவட்ட செயலாளர் மு.ரஞ்சித் - மத்திய மாவட்ட துணைச்செயலாளர் இரா.பூக்கடை சக்தி - மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் கு.அறிவழகன் - கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்  தோழர் அஜித் (எ) இமயன் - மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் மு.தமிழரசன் - மாவட்ட செய்திதொடர்பாளர் த.ராமு - மத்திய மாவட்ட துணை செய்திதொடர்பாளர் கண்டன உரை ப.செந்தமிழன் - மாநில ஊடகப்பிரிவு செயலாளர் நன்றியு

DINAVELMEDIA7 # நாகை_திருவள்ளுவன் அவர்களின் ஆணைக்கு இணங்க..

Image
தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் அண்ணன் #நாகை_திருவள்ளுவன் அவர்களின் ஆணைக்கு இணங்க.. பொதுச் செயலாளர் பேரறிவாளன்..மாநில நிதிச் செயலாளர் ஆதி வீரன் மற்றும் மாநிலக்குழு கலைவேந்தன் ..வழிகாட்டுதலின்படி ...மாநில ஊடகவியல் செயலாளர் செந்தமிழன் l..அறிவுரையின்படி              நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மணல்மேடு கோபிஆலோசனைப்படி         இன்று புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் #சக்திவேல் அவர்கள் ஒருங்கிணைப்பில்...  சிறப்பு அழைப்பாளர் நகரச் செயலாளர் உமாமகேஸ்வரன்      ஆகியோர் பொம்மைகுட்டைமேடு பகுதியில் உள்ள இளைஞர்களிடம் அம்பேத்கர் பெரியார் கருத்தியல் பரப்புரை செய்து இளைஞர்களை புலிகளாக அமைப்பாக்கினர். தோழர்களும் தங்களை தமிழ்ப்புலிகளாக இணைத்து கொண்டு சாதி ஒழிப்பு களத்தில் களமாடுவதாக உறுதி அளித்தனர்... இவண்: சு.சம்பத் வள்ளுவன் புதுச்சத்திரம் ஒன்றியம் ஓன்றிய ஊடகப்பிரிவு தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் அண்ணன் #நாகை_திருவள்ளுவன் அவர்களின் கரங்களை வலுப்படுத்த... நாமக்கல் மத்திய மாவட்ட தமிழ்புலிகள் கட்சி #நகர_செயலாளரசெயலாளர் தமிழ்ப்புலிகள் கட்சி நாமக்கல் மத்திய மாவட்டம் தினவேல் நாமக்கல் மாவட்ட நி

DINAVELMEDIA7 # கிறிஸ்தவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்லறைத் தோட்டத்தில்புதிய சுற்று சுவர்அமைக்க நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து

Image
கிறிஸ்தவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்லறைத் தோட்டத்தில்புதிய சுற்று சுவர்அமைக்க நாமக்கல் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து திரு KPP பாஸ்கர் MLAஅவர்கள் நிதி ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்ட தினவேல் நிருபர் K.S.வேல்முருகன்.

DINAVELMEDIA7 # ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்து அமைச்சர் சரோஜா ஆய்வு..

Image
ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்து அமைச்சர் சரோஜா ஆய்வு.... நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரத்தில் நகராட்சிக்கு சொந்தமான 3 ஏக்கர் பரப்பளவில் அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக முருங்கை தோட்டம் அமைத்து அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட முருங்கை,இனிப்பு உருண்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநில சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தெரிவித்துள்ளார் . சந்திரசேகரபுரம் பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காடு வளர்க்கும் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் ஊட்டச்சத்து தோட்டம் அமைப்பது குறித்து அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். தினவேல் நிருபர் K.S.வேல்முருகன்.

DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. மெகராஜ் அவர்கள் நடத்திய கல ஆய்வில் நாமக்கல் பேருந்து நிலையம் பயனிகளிடமும் மற்றும் நடத்துனரிடம் முககவசம் அணியவில்லை என்று ரூ.200 அபராதம் விதித்தார்

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. மெகராஜ் அவர்கள் நடத்திய கல ஆய்வில் நாமக்கல் பேருந்து நிலையம் பயனிகளிடமும் மற்றும் நடத்துனரிடம் முககவசம் அணியவில்லை என்று ரூ.200 அபராதம் விதித்தார் இதனால் மாவட்டம் முழுவதும் விழிபணர்வு ஏற்பட்டது. தினவேல் செய்திகளுக்காக நாமக்கல் மாவட்ட நிருபர் K.S.வேல்முருகன்.

DINAVELMEDIA7 நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா அருகில் குளக்கரை அமைந்துள்ளது இந்த குளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணத்தால் குளத்தின் நீர் அதிகரித்துள்ளது.

Image
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நேரு பூங்கா அருகில் குளக்கரை அமைந்துள்ளது இந்த குளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணத்தால் குளத்தின் நீர் அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் நாமக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். தினவேல் செய்திக்காக சேந்தமங்கலம் தாலூக நிருபர் ந. ராஜா.

DINAVELMEDIA7 # நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.

Image
நாமக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்பு தற்போது தான் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. பிற மாவட்டங்களுக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து கணிசமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன இதனால் மக்களின் போக்குவரத்து தங்கு தடையின்றி நடக்கிறது. பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் திறக்கப்பட்டுள்ளன இதனால் கடை வியாபாரிகள் சிறிது வருமானம் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்ட தினவேல் கேமராமேன் D.லோகேஸ்வரன்.

DINAVELMEDIA7 # ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

Image
ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை உடுமலையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழ்நாடு பார் கவுன்சிலில் ஒருதலைப்பட்சமாக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றங்கள் முன் தமிழக பார் கவுன்சிலின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதில் தலையிட்டு தனக்கு வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் பாகுபாடு பார்த்து தொழில் செய்வதற்கும் சட்டத்துக்குப் புறம்பாக இடைக்காலத் தடை விதித்து கண்டித்தும் நீதிமன்றங்களை முழுமையாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது உடுமலை வழக்கறிஞர் சங்கத் தலைவர் பி. ஏ .எஸ். சுந்தரம் | செயலாளர் மாரிமுத்து மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.திருப்பூர் செய்தியாளர்கள் .மா. துரை. T.யோகராஜ்

DINAVELMEDIA7 # தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தையில் மேற்கூரைகள் அமைக்கும் பணி மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திட்ட பணியினை தர்மபுரி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன் பார்வையிட்டார்

Image
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தையில் மேற்கூரைகள் அமைக்கும் பணி மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திட்ட  பணியினை தர்மபுரி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன் பார்வையிட்டார் உடன் கம்பைநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆறுமுகம் தலைமை நிலைய எழுத்தர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

DINAVELMEDIA7 # அவிநாசியில் தற்காலிக குரோனா மையத்திற்கு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கள்.

Image
அவிநாசியில் தற்காலிக குரோனா மையத்திற்கு பல்வேறு தனியார் அமைப்புகள் இணைந்து குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கள்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரக்கூடிய சூழ் நிலையில் ஏற்கனவே அவினாசியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையத்தில் புதிதாக இரண்டாவது வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன அவற்றிற்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் பிரேம் ரோட்டரி சங்கம் மற்றும் அம்மன் ஜுவல்லரி நிர்வாகம் இணைந்து வழங்கினர்.திருப்பூர் செய்தியாளர்கள்.. மா. துரை. T.யோகராஜ்

DINAVELMEDIA7 # அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை 25 லட்சத்திற்கு ஏலம்.

Image
அவிநாசி சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை 25 லட்சத்திற்கு ஏலம்:திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை 25 லட்சத்திற்கு ஏலம் போனது.திருப்பூர் மாவட்டம் சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடவே இந்த வாரம் நடைபெற்ற இடத்திற்கு ஆயிரத்து 750 மூட்டைகள் கொண்டுவரப்பட்டன.குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை 5280 முதல் 5310 வரையிலும் இரண்டாவது ரக நிலக்கடலை ரூபாய் 4850 முதல் ரூபாய் 4950 வரையிலும் மூன்றாவது ரக நிலக்கடலை 4740 முதல் 4410 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 25 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.இவ்வாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் செய்தியாளர்கள்..மா.துரை.T. யோகராஜ்

DINAVELMEDIA7 # மின்சாரம் இல்லாததால் 3 கொரோனா நோயாளிகள் பலி திருப்பூர் GH ல் பரபரப்பு:திருப்பூர் GH ல்மின்சாரம் இல்லாததால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image
மின்சாரம் இல்லாததால் 3 கொரோனா நோயாளிகள் பலி திருப்பூர் GH ல் பரபரப்பு:திருப்பூர் GH ல்மின்சாரம் இல்லாததால் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 620 பேர் பாதிப்படைந்துள்ளனர்.அவர்களில் 1590 திருப்பூர் உடுமலை காங்கேயம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 3 பேர் மின்சாரம் இல்லாமல் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை முதல் மின்சாரம் இல்லாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் செய்தியாளர்கள்: மா.துரை. T. யோகராஜ்

DINAVELMEDIA7 # பழனியில் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு சொந்தமான மானிபக்காட்டில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைக்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வரியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில், அத்துமீறி திறந்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு.

Image
பழனியில் முஸ்லீம் தர்ம பரிபாலன சங்கத்திற்கு  சொந்தமான மானிபக்காட்டில் செயல்பட்டுவந்த காய்கறி சந்தைக்கு செலுத்தவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வரியை செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்திருந்த நிலையில், அத்துமீறி திறந்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு. அனுமதியின்றி உள்ளே வந்தவர்களிடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பழனியில் இருந்து தின வேல் செய்தியாளர் வெங்கடேஸ்வரன்

DINAVELMEDIA7 # சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த SDPI, நாம் தமிழர் மற்றும் பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர்.

Image
பழனி மூலக்கடை வீதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே, நரேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் கொடிக்கம்பம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த நிலையில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அப்பகுதியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த SDPI, நாம் தமிழர் மற்றும் பார்வர்டு ப்ளாக் ஆகிய கட்சிகளின் கொடிக் கம்பங்களையும் போலீசார் அகற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

DINAVELMEDIA7 # திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் கணியாம் பூண்டியில் பாஜக அலுவலகம் திறப்பு.

Image
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் கணியாம் பூண்டியில் பாஜக அலுவலகம் திறப்பு ::பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி குட்பட்ட கணியாம்பூண்டி இப்பகுதியில் பாஜக சார்பில் பாஜக குடியேற்றப்பட்டு கணியாம்பூண்டி பகுதி அலுவலகம் திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பாஜகவின் திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில் வேல் கலந்துகொண்டு கொடியை ஏற்றி வைத்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் இதனையொட்டி அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி பிரதமர் மோடி அவர்களின் 70வது பிறந்த நாளை கொண்டாடினார்.திருப்பூர் செய்தியாளர்கள்.மா.துரை. T. யோகராஜ்

DINAVELMEDIA7 # திருப்பூர் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Image
தாராபுரத்தில் போக்குவரத்து ஊழியர் வீட்டில் கொள்ளை ::திருப்பூர் தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி 54 இவர் அரசு போக்குவரத்து கழக ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் நேற்று அமாவாசை அன்று தனது மனைவி அமுதா வயது 48 மகன் விஜயவர்மன் ஆகியோருடன் நாமக்கல் மாவட்டம் மோகனூர் நவலடியான் குலதெய்வ கோவிலுக்கு காரில் குடும்பத்துடன் சென்றனர் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தனர் பிறகு வீட்டின் கதவை திறந்து பார்க்கும் பொழுது வீட்டில் பின்புறம் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அப்பொழுது பீரோவில் வைத்திருந்த இரண்டு பவுன் தங்க செயின் 10 ஆயிரம் ரூபாய் பணம் மடிக்கணினி ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர் இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரணை நடத்தி வருகின்றன இதனால் அப்பகுதியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பூர் செய்தியாளர்கள

DINAVELMEDIA7 # திருப்பூர் அவிநாசியில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் .

Image
அவிநாசியில் பெண்ணை ஏமாற்றிய நபர் கைது ::திருப்பூர் அவிநாசியில் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் கோவை மாவட்டம் சூலூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார் இவரது மகள் வயது 20 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த ஆலயத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு வந்தார் அப்போது ஆலம்பாளையம் ஏ டி காலனி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்னுடன் நட்பாகப் பழகி வந்தார் பின்னர் அதுவே அவர்கள் இடையே காதலாக மாறியது இந்நிலையில் சதீஷ்குமார் இடம் தன்னை திருமணம் செய்யும்படி கூறியதாக தெரிகிறது இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார் இதன் காரணமாக ஆத்திரமடைந்த பெண் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின்பேரில் நகரி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருப்பூர் மாவட்டம் கிளை சிறையில் அடைத்தனர்.திருப்பூர் செய்தியாளர்கள். மா.துரை. T. யோகராஜ்

DINAVELMEDIA7 # தாராபுரம் அருகே விபத்து* சற்று முன் தாராபுரம் அருகே பல்லடம் பைபாஸில் விகே மில்ஸ் சேர்ந்த சேது என்பவர் தினமும் திருப்பூர் வேலைக்கு சென்று வந்தார்.

Image
தாராபுரம் அருகே விபத்து* சற்று முன் தாராபுரம் அருகே பல்லடம் பைபாஸில் விகே மில்ஸ் சேர்ந்த சேது என்பவர் தினமும் திருப்பூர் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று தாராபுரம் அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பழனி அருகே உள்ள விகே மில்லை சேர்ந்த சேது என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்