DINAVELMEDIA7 # புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாஸ்மாக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டாஸ்மாக் கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
 அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லா வாரியில் அரசு மதுபான கடை டாஸ்மாக் நேற்று திறக்கப்பட்டது இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர் இது குறித்த தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு திரு ஜெயசீலன் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது வல்லவாரி கிராமத்தில் சமாதான கூட்டம் நடத்தி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்றும் அதுவரை டாஸ்மாக் கடையை மூடுவது என்றும் எடுத்து கூறினர் இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனிடையே மேலும் இரண்டு கடைகள் அறந்தாங்கி அடுத்து நாகுடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை நேற்று திறக்க இருந்த நிலையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திறக்கப்படவில்லை இதேபோன்று அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட காரைக்குடி சாலையில் டாஸ்மாக் திறக்க பொதுமக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்தக் கடைகள் திறக்கப்படவில்லை

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.