DINAVELMEDIA7 # தேனி அருகே தப்புக்குண்டு, வீரபாண்டியில் அரசு கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ. 265 கோடியில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
11/09/20: தேனி மாவட்டம்: தேனி அருகே தப்புக்குண்டு, வீரபாண்டியில் அரசு கால்நடை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ரூ. 265 கோடியில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் கல்லுாரி பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் உள்ள தனியார் கட்டடத்தில் செயல்பட உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. கலெக்டர் பல்லவி பல்தேவ் முன்னிலை வகித்தார். கால்நடை பல்கலை துணை வேந்தர் பாலசந்திரன், பதிவாளர் டென்சிங் ஞானராஜ், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கல்லுாரி அமையவுள்ள இடத்தில் சாலை, தண்ணீர் வசதிகள் குறித்து ஆலோசித்து பணிகள் துவக்க உத்தரவிடப்பட்டது.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment