DINAVELMEDIA7 # மாணவர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.





மாணவர்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.பல்லடத்தில் மாணவ மாணவிகளின் உயிர்கொல்லி ஆகியுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மனித நேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.மத்திய அரசு நடத்தி வரும் மருத்துவ கல்விக்கான தேசிய தேர்வான நீட்தேர்வு மாணவர்களின் உயிர்க்கொல்லி தீர்வாக மாறியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் அரியலூர் மாவட்டத்தில் விக்னேஷ் என்ற மாணவன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரை தல்லாகுளம் காவல் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா நீட் தேர்வு குறித்து அச்சத்தாலும் மன உளைச்சலாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு மனஉளைச்சலாலும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சலாலும் பயமும் தான் காரணம் என்பதை கடிதம் மற்றும் குரல் பதிவின் மூலம் வெளியாகி உள்ளது. தமிழக அரசு நீட் தேர்வை ஏற்று இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாணவர்களின் உயிர்களைக் காப்பாற்ற கல்வி உரிமையை பாதுகாக்க சமூக நீதியை நிலைநாட்ட நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய மத்திய அரசு கோரியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.திருப்பூர் செய்தியாளர் ..மா.துரை

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.