DINAVELMEDIA7 # தேனியில் 3.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
12/09/20:தேனி மாவட்டம் :தேனியில் 3.45 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது.
1முதல் 19 வயது வரையுள்ளவர்களை குடற்புழு தாக்குகிறது,மலம் கழிக்க திறந்த வெளி பயன்படுத்துவதால் குடற்புழுக்கள் மனித உடலில் குடலில் தங்கி ஊட்டசத்து குறைபாடு, ரத்த சோகை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்கு "தேசிய குடற்புழு நீக்க முகாம்" செப். 14 ,19 வரையும், அடுத்து 21,26 வரையும், விடுபட்டவர்களுக்கு 28ம் தேதி அனைத்து ஆரம்ப, துணை சுகாதார நிலையம் மற்றும் ஊட்டசத்து மையத்திலும் 'அல்பண்டசோல்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
மொத்தம் 3,45,153 பேருக்கு வழங்கப்படுகிறது. குழந்தைகள், பெற்றோர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து,வாங்கி பயன்பெறலாம் என கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment