DINAVELMEDIA7 # எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.*





*எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி கட்டாயம் என்று பாரத ஸ்டேடட் வங்கி அறிவித்துள்ளது.*

எஸ்பிஐ வங்கியில் ஏடிஎம் மோசடியைத் தடுக்கும் வகையில் ஓடிபி முறை தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது, வங்கியோடு இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP எனும் ஒரு முறை பாஸ்வேர்டு வரும். இந்த பாஸ்வேர்டை எண்டர் செய்தால் தான் பணம் எடுக்க முடியும்.

இந்த நிலையில், இந்த ஓடிபி முறை நாட்டின் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம் மையங்களிலும் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு மட்டும் ஓடிபி வரும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்ளகள் இனி ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க செல்லும் போது, தங்களது செல்போனையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். வங்கியோடு செல்போன் எண்னை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா