DINAVELMEDIA7 # ஆண்டிபட்டியில் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.




13/09/20:தேனி மாவட்டம
ஆண்டிபட்டியில் தேங்காய்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் வருஷநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் தென்னை சாகுபடி உள்ளது. தமிழகத்தின் பல பகுதிக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ய வியாபாரிகள் தேவையை கருத்திற்கொண்டு விலையை உயர்த்து உள்ளனர்.முன்பு ரூ.10க்கு விற்ற தேங்காய் தற்போது ரூ. 15க்கும், பெரிய அளவிலான தேங்காய் ரூ.20 முதல் ரூ.30 வரையும் விற்கப்படுகிறது. ஆயுத பூஜையை கணக்கில் கொண்டு மொத்த வியாபாரிகள் தேங்காயை இருப்பில் வைத்து விலையை உயர்த்தி உள்ளனர், இதனால் தற்போது மக்களுக்கு தேங்காய் மீது கிராக்கி ஏற்பட்டு உள்ளது.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா