DINAVELMEDIA7 # கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்கையில் அமைந்துள்ள சூராணிக்கரை அருள்மிகு ஸ்ரீ நாக கன்னி அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா கொரோனா தடுப்பு உத்தரவு காரணமாக குறைந்த பக்தர்களுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.





கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட எல்கையில் அமைந்துள்ள சூராணிக்கரை அருள்மிகு ஸ்ரீ நாக கன்னி அம்மன் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழா கொரோனா தடுப்பு உத்தரவு காரணமாக குறைந்த பக்தர்களுடன் வெகு விமர்சியாக நடைபெற்றது. நிகழ்ச்சியை சமூக வலைத்தளங்களிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் அனைத்து பக்தர்களும் காண நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்ட எல்கையில் பழவூர் அருகே அமைந்துள்ள சூராணிக்கரை அருள்மிகு ஸ்ரீ நாக கன்னி ஆலயத்திற்கு உள்ளூர் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களிருந்து பக்தர்கள் வந்து வெள்ளி, செவ்வாய், சித்ரா பௌர்ணமி, அம்மாவாசை போன்ற நாட்களில் தரிசனம் செய்து அருள் வாக்கு கேட்பது வழக்கம். அனைத்து பக்தர்களின் வேண்டுதல்களை இந்த அம்மன் நிறைவேற்றி வருவதால் கடந்த சில வருடங்களாக பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் விழாவிற்கு கொரோனா தடுப்பு உத்தரவு அமலில் உள்ள காரணமாக கோவில் பொது இடங்களில் அதிக பக்தர்கள் கூடுவதை தடுக்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் குறைந்த அளவு பக்தர்களுடன் வெகு விமர்சியாக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை பக்தர்கள் அனைவரும் கண்டுகளிக்கும் ஏதுவாக
சமூக வலைத்தளங்களான யூ டூப், வாட்ஸ் ஆப், பேஸ் புக், உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் நேற்று முதல் கணபதி ஹோமம், மிருத்துஞ்சய ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பலி, துர்க்கா ஹோமம் உட்பட பல யாகங்கள் நடைப்பெற்றது.  பின்னர் பரிவார தெய்வங்களான ஸ்ரீ கால பைரவி அம்மன், ஸ்ரீ காந்தாரி அம்மன், ஸ்ரீ சுடலை ஆண்டவர், ஸ்ரீ இசக்கி அம்மன், வன பத்ர காளி மற்றும் மூலவரான   நாக கன்னி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமும்,  அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. அருள்வாக்கின் போது நாக கன்னி அம்மன் வீச்சரிவாள் மீது ஒற்ற காலில் நின்றும், வீச்சரிவாள் மீது நின்று ஊஞ்சல் ஆடியும் அருள்பாலித்தது அனைத்து பக்தர்களையும் வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் இரண்டு நாட்களும் மூன்று வேளை அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை கோவில் தர்ம கர்த்தா மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா