DINAVELMEDIA7 # தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் ஆண்டிப்பட்டி கூட்டுறவு செயல் அலுவலராக இருந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக இவர் உள்ளார்.





17/09/20:போடி -உத்தமபாளையம்: 
தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் ஆண்டிப்பட்டி கூட்டுறவு செயல் அலுவலராக இருந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலராக இவர் உள்ளார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரால் தேனி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான குழு நேற்று காலை 6 மணியளவில் பாலசுப்ரமணியம்வீட்டில் சோதனை மேற்க்கொண்டனர்,இவரின் வீட்டில் உள்ள பீரோ லாக்கர்களில் சோதனை நடத்தி பிறகு பாலசுப்ரமணி குடும்பத்தினர் பெயரில் உள்ள வங்கி கணக்குகள் கேட்டறிந்து அவர்களின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன, காலை முதல் மாலை வேளைக்கு முன்பு வரை இவர் வீட்டில் சோதனையே முடித்து
மாலை 4 மணியளவில் இவரின் மதுரை கிளை மாவட்ட கூட்டுறவு வங்கி கிளைக்கு சென்று பாலசுப்ரமணியன் லாக்கரில் சோதனை மேற்கொண்டனர் , இச்சோதனையில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததுக்கான ஆவணம் லஞ்ச ஒழிப்பு போலிசாருக்கு கிடைத்தன.பிறகு இவரின் கூட்டுறவு கிளைக்கு "சீல் "வைத்து பாலசுப்ரமணித்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர், தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.