DINAVELMEDIA7 # நீலகிரி மாவட்டம் குந்தா சரகம், அதிகரட்டி காவல் பகுதி எல்லைக்குட்பட்ட அதிகரட்டி கிராமம் முட்டிநாடு - கொள்ளிமலை சாலையில் கேளையாடு ஒன்றினை துப்பாக்கியில் சுட்டுக் கொன்று




நீலகிரி மாவட்டம் குந்தா சரகம், அதிகரட்டி காவல் பகுதி எல்லைக்குட்பட்ட அதிகரட்டி கிராமம் முட்டிநாடு - கொள்ளிமலை சாலையில் கேளையாடு ஒன்றினை துப்பாக்கியில் சுட்டுக் கொன்று காரில் எடுத்துச் சென்றதாக கிடைத்த இரகசிய தகவலின்படி, மா.வ.அ & உ.வ.பா அவர்களின் உத்திரவுப்படி காவல் துறை உதவியுடன் வாகணம் மற்றும் குற்றவாளி A1 மணிகன்டன் என்பவரை கைப்பற்றி,;குந்தா சரக WLOR. No. 04/2020ன்படி குற்ற வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், இக்குற்றத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் ஐந்து நபர்கள் என்பதும் உதகை அருகே கேத்தி கிராமம், சாந்தூரில் A1 மணிகன்டனுக்கு சொந்தமான தனியார் விடுதியில் தங்கியிருந்ததும் எந்த ஒரு ஆவணங்களும் விடுதிக்கு இல்லை இத்தனை நாட்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது சம்பந்தப்பட்ட துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தெரியவந்தது, மேலும் ஏற்கனவே 07/09/2020 அதிகாலை மைனலை அருகே தேயிலை தோட்டத்தில் Malabar giant squirrels என்னும் மலை அனில் ஒன்றினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று சமைத்து ஐந்து நபர்களும் மதிய உணவுடன் உண்டதும், பின்னர் மாலை சுமார் 4 மணியளவில் முட்டிநாடு கொள்ளிமலை சாலையோரத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கேளையாடு ஒன்றினை துப்பாக்கியால் (air-gun) சுட்டுக் கொன்று, காரில் எடுத்துச் சென்று தங்கும் விடுதியில் வைத்து சமைத்து உண்ணும் நோக்கில் அதனை தோல் உரித்து சுத்தம் செய்து புதரில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டு படித்து கைபற்றி, அங்கு ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மலை அனில் தலை, தோல் மற்றும் வால் பகுதிகளை கைப்பற்றி எதிரிகள் மீது வன உயிரினக் குற்றம் பதிவு செய்து, 08/09/2020 அன்று உதகை, நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு, எதிரிகள் ஐந்து நபர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது என்பதைப் பனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிரிகள் விவரம்:
A1. மணிகன்டன் த /பெ. வேலுசாமி, சாந்தனூர். கேத்தி.
A2. சுலைமான் @ சாலமன், த /பெ. நூர்முகம்மது, மதுரை
A3. ஐான் ஆம்ஸ்ட்ராங் பாபு, தூத்துக்குடி.
A4. ஜெபக்குமார், த /பெ.தேவராஜ். தூத்துக்குடி.
A5. ராமையா, த /பெ. தனபாலகிருஷ்ணன், தூத்துக்குடி.

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.