DINAVELMEDIA7 # கேரளா மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் வைத்திருந்த 80 பவுன் தங்க நகைகள் மாயமனது.
11/09/20:மூணாறு:கேரளா மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் வைத்திருந்த 80 பவுன் தங்க நகைகள் மாயமனது
ராஜமலை பெட்டிமுடியில் ஆக.6 இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 70 பேர் மாயமாகினர். அவர்களில் 66 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சிய நான்கு பேரின் நிலை குறித்து தெரிய வில்லை. இதற்காக மூணாறு சிறப்பு தாசில்தார் பினுஜோசப் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இடுக்கி கலெக்டர் தினேஷ் அவர்கள் கூறியாதவது: நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்களின் வீடுகள் காணாமல் போனதால் பொருட்கள் ஒன்றும் மிஞ்சவில்லை. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த தகவல்படி 80 பவுன் வரை தங்க நகைகள் காணாமல் போனதாக தெரியவந்தது. அதில் ஆனால் இரண்டு பவுன் மட்டும் மீட்கப்பட்டதாகவும் வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததால் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment