DINAVELMEDIA7 # தேனி 18 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் தேனி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.



23/09/20:தேனி மாவட்டம்: தேனி 18 ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தின் கீழ் தேனி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது.இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீட்டில் 8 இடங்களில் மேல்நிலை தொட்டி, தரைமட்ட தொட்டிகள்,மற்றும் குழாய்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளில் பணிகள் விரைவுபடுத்தி மார்ச் 2021க்குள் அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கி நபர் ஒருவருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.30 ஆயிரம் குடியிருப்புகளில் 10 ஆயிரம் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 20 ஆயிரம் வீடுகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்பட உள்ளது.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்.

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா