DINAVELMEDIA7 # ஆண்டிபட்டி வைகை அணையில 16 லட்சம் மீன் குஞ்சுகள் விட மீன்வளத்துறை நிர்ணயம் செய்து உள்ளது.
23/09/20:தேனி மாவட்டம் ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வைகை அணையில 16 லட்சம் மீன் குஞ்சுகள் விட மீன்வளத்துறை நிர்ணயம் செய்து உள்ளது.இங்கு இதுவரை 12.5 லட்ச மீன்கள் விடப்பட்டு உள்ளன. தற்போது வைகை அணை நீர் தேக்கத்திலகட்ளா, மிருகாள், ரோகு போன்ற 50,000 வகை மீன் குஞ்சுகள் வளர்ப்பதற்கு மீன்வளத்துறை மூலம் வைகை நீரில் விடப்பட்டன.
வைகை நீர்த்தேக்கத்தில் வளரும் மீன்களை நம்பி மீன் வியாபாரம் செய்யும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில் பெரியகுளம் சப் - கலெக்டர் சினேகா மதுரை மண்டல மீன்வளத் துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் பஞ்ச ராஜா, மீன்வள ஆய்வாளர் முருகேசன் கலந்து கொண்டனர். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment