DINAVELMEDIA7 # தேனி கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளைமீறி இயக்கப்பட்ட ஆட்டோ,டூவீலர், போன்ற இதர வாகனங்கள் போலீசாரல் கைப்பற்றப்பட்டன.
24/09/20:தேனி மாவட்டம் : தேனி கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளைமீறி இயக்கப்பட்ட ஆட்டோ,டூவீலர், போன்ற இதர வாகனங்கள் போலீசாரல் கைப்பற்றப்பட்டன. போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வாகனங்கள் மொத்தம் : 2555 இவை அந்தந்த ஊர் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டன. தற்போது ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்களை அந்தந்த வாகனத்தின் உரிமையாளரிடம் விரைவில் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என தேனி மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி உத்திரவு பிறப்பித்துள்ளார் விபத்து, மற்றும்குற்ற வழக்குகளில் தீர்வு பெற்ற தீர்ப்பு நகல்களை உரிமையாளர்கள் காண்பித்து பெற்றுச் செல்லலாம். ஊரடங்கில் விதிமீறியவர்களிடம் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை வாகனத்தின் உரிமையாளர்கள் ஓட்டுனர் உரிமம், வாகனப்பதிவு ஆவணங்களை உடன் போலீசாரிடம் சமர்பித்து வாகனங்களை பெற்று செல்லலாம் என்றும் இதுவரை 822 வாகனங்கள், வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன என்று கூறினார். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர் க.சிவக்குமார்.
Comments
Post a Comment