DINAVELMEDIA7 # குமரி மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி : நரிக்குளத்தில் பேரிடர் கால ஒத்திகை நடைபெற்றது...
குமரி மாவட்டத்தில் தொடர் மழை எதிரொலி : நரிக்குளத்தில் பேரிடர் கால ஒத்திகை நடைபெற்றது...
கன்னியாகுமரி மாவட்டம் தீயணைப்பு வீரர்களின் பேரிடர் கால ஒத்திகையானது இன்று
கன்னியாகுமரி அடுத்துள்ள நரிக்குளத்தில் நடைபெற்றது.
தீயணைப்பு துறையினர் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தில் இருந்து மக்களை எப்படி பாதுகாப்பது ,உயரமான கட்டிடங்களில் தீ விபத்து ஏற்படும் போது தீயில் சிக்கி இருக்கும் மக்களை காப்பது,பருவகாலங்களில் மழை வெள்ளங்களால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்திருக்கலாம் ஆகவே அங்கு இருக்கும் வீடுகள் மழை வெள்ளம் நிறைந்து மக்கள் வெளிவரமுடியாமல் தவிப்பவர்களை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் பயிற்சி எடுப்பது வழக்கம்.
இந்த இக்கட்டான சூழலிலும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்கள் சேவை செய்து வருகின்றனர்.இதற்கு தமிழக அரசு தீயணைப்பு துறையிருக்கு துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் என வழங்கி உள்ளது .
பேரிடர் கால மீட்பு பணிகளை கணக்கில் கொண்டு தீயணைப்படை வீரர்கள் தங்களை தானே அடிக்கடி சோதனை செய்து பார்த்து கொண்டு எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.
இந்நிலையில் இன்று மகாதானபுரத்தில் அமைந்துள்ள நரிக்குளத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநரே உத்தரவின் பேரில் பேரிடர் கால ஒத்திகை நடைப்பெற்றது.ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு ,அரசு. மருத்துவர்கள் ,அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மன்னார் ,கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் பார்வையிட்டனர்.
பேட்டி= துரை
(மாவட்ட தீயணைப்பு துறை மண்டல அலுவலர்
Comments
Post a Comment