DINAVELMEDIA7 # கூடலூர் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் பராமரிக்கப்படாமல் கரையான் பிடித்து சேதமடையும் நிலையில் உள்ளது.




13/09/20:தேனி மாவட்டம் கூடலுார் : கூடலூர் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் பராமரிக்கப்படாமல் கரையான் பிடித்து சேதமடையும் நிலையில் உள்ளது.
பெரியாறு அணையைக் கட்டிய லண்டன் பொறியாளர் பென்னிகுவிக்கிற்கு தமிழக அரசால் லோயர்கேம்பில் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மணிமண்டபம் ஜன 15, 2013 ல் திறக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு பகுதிகள், கேரளாவில் இருந்தும் பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 6 மாதங்களாக மூடப்பட்டு பராமரிக்கப்படாமல் இருந்த காரணத்தால் பென்னிகுவிக் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பெரியாறு அணை கட்டுமானப்பணிகள் குறித்த புகைப்படங்கள், கதவுகளிலும் கரையான் பிடித்து இருந்துள்ளன. மணிமண்டபத்தில் புல்வெளிகள் முட்புதராக மாறியுள்ளன. மண்டபத்தையும் புல் வேலியையும் சரி செய்து சுற்றுல பயணிகள் காண்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

# தினவேல் செய்திகள் # சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழாவின் 8ம் நாளான இன்று அய்யாவைகுண்டசாமி வெள்ளை குதிரைவாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

# தினவேல் செய்திகள் # கொங்கணாபுரம் K.A.N அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா