DINAVELMEDIA7 # உத்தமபாளையம் : மேகமலையில் ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தும் சண்முகாநதி அணை நிரம்பாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
14/09/20:உத்தமபாளையம் : மேகமலையில் ஒரு மாதத்திற்கு மேலாக நல்ல மழை பெய்தும் சண்முகாநதி அணை நிரம்பாததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சண்முகா நதி அணையின் கொள்ளளவு 52.5 அடியாகும். அணைநிரம்பும் போது பாசனத்திற்கு திறந்து நீர் மட்டம் 26 அடியாகும் வரை தண்ணீர் எடுக்கலாம். 2019 டிச. 9 ல் தண்ணீர் திறந்து ஜனவரி வரை வழங்கப்பட்டது. பிப்ரவரி முதல் அணை நீர் மட்டம் 26 அடியாக உள்ளது. மேகமலை,மணலாறு மலைப்பகுதிகளில் ஒரு மாதமாகநல்ல மழை பெய்து இங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. ஆனால்சண்முகாநதி அணை மட்டும் ஒரு அடி கூடஉயராமல் தொடர்ந்து 26 அடியில் உள்ளது.
மற்றும் சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, எரசை, ஓடைப்பட்டி கிராமங்களில் 1400ஏக்கர் நிலங்கள் பாசனதிற்காக காத்திருக்கின்றன. பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,, சண்முகாநதி அணைக்கு தென்மேற்கு பருவ மழையால் பயன் அழிக்கவில்லை, வடகிழக்கு பருவமழையினால்தா அணை நிரம்ப வாய்ப்புள்ளது. டிசம்பரில் தண்ணீர் திறக்கப்படும் என்று மக்கள் கூறினார்கள்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment