DINAVELMEDIA7 # கூடலுார்:கொரோனா பரவலால் சொந்தஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேரளா திரும்புகிறார்கள்.



12/09/20:கூடலுார்:கொரோனா பரவலால் சொந்தஊர் திரும்பிய வடமாநில தொழிலாளர்கள் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கேரளா திரும்புகிறார்கள்.
கேரளாவில் கட்டுமான பணி, வியாபார நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வேலை பார்த்தனர். கொரோனா பரவலால் பணிகள் முடங்கியதால் மார்ச்சில் சொந்த மாநிலத்திற்கு சென்றனர். தற்போது கேரளாவில் இயல்பு நிலை திரும்பியதால் மீண்டும் பணியாற்ற வடமாநில தொழிலாளர்கள் வரத்துவங்கியுள்ளனர்.
குஜராத், மத்தியபிரசேதம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை பஸ்களில் அழைத்து வரும் நிறுவனங்கள் 'இ-பாஸ்' பெற்று பரிசோதனைக்கு உட்படுத்தி தனிமைப் படுத்தப்பட்ட பின்பே பணிக்கு அமர்த்துவதாக உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து குமுளி வழியாக கேரளா செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக தனி பஸ் மூலம் ஏராளமானோர் கேரளாவிற்கு செல்கிறார்கள்.தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.