DINAVELMEDIA7 # தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை பெய்த போதிலும் நீர்வரத்தைக் காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.



12/09/20:தேக்கடி:பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை பெய்த போதிலும் நீர்வரத்தைக் காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
நேற்று காலை 8:30 மணிப்படி பெரியாறில் 16.6, தேக்கடியில் 7 மி. மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 954 கனஅடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 1200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
நீர் இருப்பு 3823 மில்லியன் கன அடியாகும். நீர்வரத்தைக் காட்டிலும் நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 126.05 அடியிலிருந்து 125.95 அடியாக (மொத்த உயரம் 152 அடி) குறைந்தது. நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதியில் மேக மூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.
வைகை அணை நீர்மட்டம் 61.58 அடியாக (மொத்த உயரம் 71அடி) இருந்தது. நீர்வரத்து 955 கன அடியாகவும், நீர் திறப்பு 972 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 3912 மில்லியன் கன அடியாக இருந்தன. தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்,

Comments

Popular posts from this blog

DINAVEL DAILY # கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உற்பத்தியாகும் சாக்லேட்டுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினவேல் - தேசிய நடுநிலை காலை நாளிதழின் துணை ஆசிரியர் (SUB EDITOR) ஆக திரு.M.சக்திவேல் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

# DINAVEL NEWS # அறச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவுத்திறன் வகுப்பறை திறப்பு விழா.