DINAVELMEDIA7 # போடி மெட்டு - கேரளா:மூணாறு கேப் ரோடு ரோட்டில் நிலச்சரிவால் சேதமடைந்த ஏலத்தோட்டங்களை வேளாண் ஆய்வு மைய வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
12/09/20:போடி மெட்டு - கேரளா:மூணாறு கேப் ரோடு ரோட்டில் நிலச்சரிவால் சேதமடைந்த ஏலத்தோட்டங்களை வேளாண் ஆய்வு மைய வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
"தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் " மூணாறு போடிமெட்டு இடையே ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது, போடிமெட்டு யிலிருந்து மூணாறுக்கு செல்லும் கேப் ரோட்டில் மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது மேலும் பாறைகள் உருண்டு வந்து ரோட்டில் விழுந்து உள்ளது.ஏலத் தோட்ட / கட்டடங்களும் சேதம் அடைந்து உள்ளன,இடுக்கி யில் சாந்தாம்பாறையில் உள்ள வேளாண் ஆய்வு மையத்தை சேர்ந்த வல்லுனர்கள் ஜெயபாபு, சுதாகரன்சுந்தர்ராஜ், நந்தகோபால் ஆகியோர் சேதமடைந்த ஏலத் தோட்டங்களை ஆய்வு நடத்தி சேதமதிப்பை கணக்கிட்டு அதன் அறிக்கை பெங்களூரில் உள்ள தலைமை வேளாண் ஆய்வு மையம் மூலம் மத்திய வேளாண் அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவித்தனர், தினவேல் நாளிதழ்க்காக போடி நிருபர்: க.சிவக்குமார்
Comments
Post a Comment