DINAVELMEDIA7 # பழனி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் முக கவசம் இல்லாமல் நுழைந்தால் 200 வரை அபராதம் விதிக்கப்படும் சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு.
பழனி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் முக கவசம் இல்லாமல் நுழைந்தால் 200 வரை அபராதம் விதிக்கப்படும் சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு.
பழனி நகரில் கொரனா தொற்று அதிகமாக பரவி வருகின்ற காரணத்தினால் தொற்று உறுதிப்படுத்தியவர்களை அரசு மருத்துவமனையிலும் கல்லூரி வளாகத்திலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கொரனா பற்றி சிறிதும் கவலைப்படாமல் பாதுகாப்புக் கவசமான முகக்கவசம், சானிடைசர், உள்ளிட்டவைகளை பயன்படுத்தாமல் வருகின்றனர். இதனால் நோய் தொற்று எளிதில் பரவும் சூழ்நிலை காணப்படுகின்றன எனவே பொதுமக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக சுகாதாரத் துறை அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு 200 ரூபாய் வரை அவதாரம் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அதிரடி முடிவை அறிவித்துள்ளதுமேலும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உதயகுமார் மற்றும் சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவர் மகேந்திரன் உள்ளிட்டோர் முககவசம் பற்றி பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் முகக்கவசம் பற்றி கருத்துக்கள் அடங்கிய பதாகைகளை வைத்து வருகின்றனர்.
*எனவே மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் முககவசம் இல்லாமல் வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...
Comments
Post a Comment